தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெண்கள் உலக மேசைப் பந்து போட்டியில் சிங்கப்பூர் வெற்றி

1 mins read
b1aece7a-8365-4258-9888-72f4cc8c0b8b
இறுதி ஆட்டத்தில் 26 வயது செங் ஜியன், வேல்ஸ் அணியின் அனா ஹர்சேவுடன் மோதினார். - படம்: உலக மேசைப் பந்து சங்கம்

தென்கிழக்கு ஆசியப் போட்டியில் பெண்கள் பிரிவில் மேசைப் பந்தில் தங்கம் வென்ற சிங்கப்பூரின் செங் ஜியன், கத்தாரில் நடந்த உலக மேசைப் பந்துப் போட்டியில் மகுடம் சூடினார்.

இறுதி ஆட்டத்தில் 26 வயது செங் ஜியன், வேல்ஸ் அணியின் அனா ஹர்சேவுடன் மோதினார்.

ஆட்டத்தை 11-6, 11-5, 11-5 என்ற நேர் செட்களில் வென்ற செங் ஜியன், கிண்ணத்தைத் தட்டிச்சென்றார்.

தென் கொரியா, சீனா, இத்தாலி, தைப்பே ஆகியவற்றில் இருந்து வந்த முன்னணி வீரர்களுடன் செங் ஜியன் விளையாடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்