முதலிடத்தைக் குறிவைக்கும் இந்தியா, நியூசிலாந்து

முதலிடத்தைக் குறிவைக்கும் இந்தியா, நியூசிலாந்து

1 mins read
b10e6e19-126f-4bce-aa55-7a9d324123e1
படம்: -  ஏஎஃப்பி

தர்மசாலா: உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் 21வது ஆட்டத்தில் இந்தியாவும் நியூசிலாந்தும் தர்மசாலா விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணிக்கு விளையாடுகின்றன.

இந்த உலகக் கிண்ணத் தொடரில் இரு அணிகளும் நான்கு ஆட்டங்களில் விளையாடி, நான்கிலும் வெற்றிபெற்றுள்ளன.

அதனால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளுக்கும் அதன் பலம் பந்தடிப்பாக உள்ளது.

இத்தொடரில் இந்தியாவின் ரோகித் சர்மா 265 ஓட்டங்களும் விராத் கோஹ்லி 259 ஓட்டங்களும் எடுத்துள்ளனர். அவர்களது ஓட்ட வேட்டை நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் தொடரும் என்று கிரிக்கெட் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

அதே நேரம், நியூசிலாந்து அணியின் பந்தடிப்பாளர்கள் அனைவரும் கூட்டாகச் செயல்பட்டு ஓட்டங்கள் எடுப்பதால் இந்தியப் பந்துவீச்சாளர்களுக்குச் சவாலாக இருக்கக்கூடும்.

இரு அணிகளும் சமபலமாகக் காணப்படுவதால் இந்த ஆட்டம் ஒரு நல்ல பயிற்சி ஆட்டமாகவும் அமையலாம்.

பங்ளாதே‌ஷ் அணிக்கெதிரான ஆட்டத்தின்போது ஹார்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டதால் அவர் இந்த ஆட்டத்தில் பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் காயத்திலிருந்து மீளவில்லை.

தர்மசாலா ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் வகையில் இருக்கும் என்பதால் இந்திய அணியில் முகம்மது ‌‌ஷமி சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தர்மசாலாவில் வெற்றிபெறும் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறும். அதனால் ஆட்டத்தில் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது.

ஆட்டத்திற்கான நுழைவுச்சீட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்