தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெல்ல வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான்

1 mins read
af569069-7afe-4a0c-aee2-a0f88708f2d2
படம்: - ஏஎஃப்பி

சென்னை: உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் 22வது ஆட்டத்தில் பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் சேப்பாக்கம் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை மாலை 4:30 மணிக்கு விளையாடுகின்றன.

அடுத்தடுத்து இரு ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ள பாகிஸ்தான், இவ்வாட்டத்தில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சரியாக விளையாடவில்லை என்றால் பாகிஸ்தான் அணிக்கு புள்ளிப்பட்டியலில் கடுமையான நெருக்கடி ஏற்படக்கூடும். அதனால் அது முழு பலத்தையும் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் அணியின் ஆட்டத்திற்கு சென்னை ஆடுகளம் நன்றாக ஒத்துழைக்கும் என்பதால் பாகிஸ்தானுக்கு இது சவாலான ஆட்டமாக இருக்கக்கூடும்.

குறிப்புச் சொற்கள்