காற்பந்து: மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பிய சிட்டி

காற்பந்து: மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பிய சிட்டி

1 mins read
88ddd8f7-852c-4791-8de1-afe1fa89b6ef
படம்: - இபிஏ

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டி மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ளது.

தொடர்ந்து இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்து திணறி வந்த சிட்டி, பிரைட்டன் குழுவை 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஆட்டத்தின் 7வது நிமிடத்திலும் 19வது நிமிடத்திலும் சிட்டி அணிக்கு கோல்கள் கிடைத்தன.

ஆட்டத்தின் 73ஆவது நிமிடத்தில் பிரைட்டன் குழு கோல் அடித்தது.

தற்போதைய நிலவரப்படி புள்ளிப்பட்டியலில் சிட்டி 21 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

வரும் 29ஆம் தேதி சிட்டி அதன் பரம வைரியான மான்செஸ்டர் யுனைடெட் குழுவையும் எதிர்த்தாடவுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்