அமெரிக்க எஃப்1 கார் பந்தயத்தில் இருந்து ஹேமில்டன், லெக்லெர்க் தகுதிநீக்கம்

அமெரிக்க எஃப்1 கார் பந்தயத்தில் இருந்து ஹேமில்டன், லெக்லெர்க் தகுதிநீக்கம்

1 mins read
3b830b36-9934-4731-8bac-26eaa5466f1e
ஃபெராரியின் சார்ல்ஸ் லெக்லெர்க் (இடது), மெர்சிடிஸ் அணியின் லூவிஸ் ஹேமில்டன். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 3

ஆஸ்டின்: அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எஃப்1 கார் பந்தயத்தில் இருந்து மெர்சிடிஸ் அணியின் லூவிஸ் ஹேமில்டனும் ஃபெராரியின் சார்ல்ஸ் லெக்லெர்க்கும் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அவ்விரு வீரர்களும் ஓட்டிய கார்கள் பந்தயத்துக்குப் பிறகு பரிசோதிக்கப்பட்டன. அதில் சில தவறுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அதுகுறித்து உயர்மட்ட அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தப்பட்டது.

முன்னதாக, பந்தயத்தில் ஹேமில்டன் இரண்டாம் இடத்திலும் லெக்லெர்க் ஆறாம் இடத்திலும் வந்தனர். ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டப்பன் பந்தயத்தில் வென்றார்.

ஹேமில்டன், லெக்லெர்க் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால், மெக்லெரன் அணியின் லாண்டோ நோரிஸ் இரண்டாம் இடத்துக்கும் லெக்லெர்க் அணியினரான கார்லோஸ் சையன்ஸ் மூன்றாம் இடத்துக்கும் முன்னேறினர்.

குறிப்புச் சொற்கள்