தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘சிக்சர் அடிக்க பாகிஸ்தானிய வீரர்கள் புரதம் நிறைந்த உணவு சாப்பிட வேண்டும்’

1 mins read
f9b8863c-cb71-4c31-841b-e31b9b62a6c8
இமாம் உல் ஹக் (வலது) நகைச்சுவையாகக் கூற முற்பட்ட கருத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: ‘பவர் பிளே’ ஓவர்களில் சிக்சர் அடிக்க பாகிஸ்தானிய கிரிக்கெட் அணி வீரர்கள் புரதச்சத்து நிறைந்த உணவு வகைகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்று அந்த அணி பந்தடிப்பாளர் இமாம் உல் ஹக் கூறியுள்ளார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் ஒருநாள் போட்டியின் லீக் சுற்று ஆட்டத்தில் திங்கட்கிழமை ஆப்கானிஸ்தான் அணியுடன் பாகிஸ்தான் பொருதுவதற்கு முன்பு நடந்த செய்தியாளர் சந்திப்பில் இமாம் இதனைச் சொன்னார்.

பவர் பிளே ஓவரில் பாகிஸ்தானிய பந்தடிப்பாளர்கள் ஓட்டங்களைக் குவிக்காதது குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, “மாவுச்சத்தைக் குறைத்துக்கொண்டு புரதம் நிறைந்த உணவு வகைகளை நாம் உண்ண வேண்டும்,” என்று இமாம் பதிலளித்தார்.

ஆனால், அவர் நகைச்சுவையாகக் கூற முற்பட்ட கருத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. இணையவாசிகள் பலரும் இமாமின் கருத்துகளை விமர்சிக்கும் விதமாக பதிவுகளை வெளியிட்டனர்.

குறிப்புச் சொற்கள்