ஆதிக்கத்தை தொடர விரும்பும் ஆஸ்திரேலியா

ஆதிக்கத்தை தொடர விரும்பும் ஆஸ்திரேலியா

1 mins read
41480bbc-2a73-4d19-9255-00768e5630f8
பந்துவீச்சில் ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்கள் மீண்டும் விக்கெட்டுகள் வீழ்த்தி வருவது அவ்வணிக்கு நம்பிக்கைத் தருகிறது. - படம்: ஏஎஃப்பி

டெல்லி: உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் 24வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் நெதர்லாந்தும் புதன்கிழமை மோதுகின்றன.

ஆட்டம் மாலை 4.30 மணிக்கு டெல்லி விளையாட்டரங்கில் நடக்கிறது.

இரண்டு தோல்விகளுடன் உலகக் கிண்ணத் தொடரைத் தொடங்கிய ஆஸ்திரேலியா அணி, இலங்கை, பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது.

இருப்பினும் ஆஸ்திரேலியாவுக்கு பந்தடிப்புப் பிரிவு தலைவலியாக உள்ளது.

முதல் மூன்று ஆட்டங்களிலும் பந்தடிப்பு பிரிவு சொல்லிக்கொள்ளும்படி ஓட்டங்கள் எடுக்கவில்லை.

பாகிஸ்தானுக்கு எதிராகத் தொடக்கநிலை பந்தடிப்பாளர்கள் டேவிட் வார்னர், மிட்சல் மார்‌ஷ் இருவரும் சதம் அடித்ததால் 367 ஓட்டங்கள் குவிக்க முடிந்தது.

பந்துவீச்சில் முன்னணி வீரர்கள் மீண்டும் நம்பிக்கையுடன் காணப்படுவதால் நெதர்லாந்து அணியை எளிதில் கட்டுப்படுத்துவார்கள் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

மறுபக்கம் நெதர்லாந்து அணி தான் ஒரு சிறிய அணி இல்லை என்பதை நிரூபித்து வருகிறது.

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அனுபவம் இல்லாவிட்டாலும் நெதர்லாந்து பந்தடிப்பிலும் பந்துவீச்சிலும் கடுமையான போட்டி தருகிறது.

டெல்லி ஆடுகளம் பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதால் ஆஸ்திரேலியாவுக்கு சவாலான ஆட்டம் காத்திருப்பதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றால் ஆஸ்திரேலியாவின் அரையிறுதி வாய்ப்பு சற்று கூடும்.

குறிப்புச் சொற்கள்