காற்பந்து: இஸ்ரேல் ஆட்டங்கள் நவம்பருக்கு மாற்றம்

1 mins read
c3fc14af-5d1f-4f3e-bc84-cb5b7607e272
படம்: - பிக்சாபே

பாரிஸ்: இஸ்ரேல் காற்பந்து அணி இம்மாதம் ஆட இருந்த அனைத்துலக ஆட்டங்களை அடுத்த மாதத்திற்கு (நவம்பர்) மாற்றியுள்ளது பிஃபா எனும் அனைத்துலக காற்பந்து சம்மேளனம்.

அதனால், இஸ்ரேல் ஆண்கள், பெண்கள் அணிகளின் நான்கு ஆட்டங்களின் தேதிகள் மாற்றப்பட்டுள்ளதாக பிஃபா திங்கட்கிழமை அறிவித்தது.

இதற்கு முன்னர் யூஇஎஃஏ எனப்படும் ஐரோப்பிய காற்பந்து அணிகளுக்கான சங்கமும் இஸ்ரேல் காற்பந்து குழுக்களுக்கான ஆட்டங்களை வேறு தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்டது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே ஏற்பட்ட போர் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இஸ்ரேலும் கொசோவாவும் மோதும் யூரோ 2024 கிண்ணத்திற்கான தகுதி ஆட்டம் நவம்பர் 12ஆம் தேதியும் இஸ்ரேலும் சுவிட்சர்லாந்தும் மோதும் தகுதி ஆட்டம் நவம்பர் 12ஆம் தேதியும் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதேநேரம் இஸ்ரேல் பெண்கள் அணிக்கான ஆட்டம் நவம்பர் 23, 26ஆம் தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்