செந்தோசா கோல்ஃப் மன்றத்தின் செரபாங் கோல்ஃப் திடல் உலகின் சிறந்த கோல்ஃப் திடலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபியில் திங்கட்கிழமை நடந்த உலக கோல்ஃப் விருது நிகழ்ச்சியில் அது அறிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஆசியாவின் சிறந்த கோல்ஃப் திடலாக செரபாங் அறிவிக்கப்பட்டிருந்தது.
உலக அளவில் 39,000க்கும் அதிகமான கோல்ஃப் திடல்கள் உள்ளன, அவற்றில் சிறந்த ஒன்றாக அறிவிக்கப்பட்டது மிகப்பெரிய கெளரவம் என்று செந்தோசா கோல்ஃப் மன்றம் தெரிவித்தது.
கடந்த சில ஆண்டுகளாகவே செரபாங் கோல்ஃப் திடல் உலக அளவில் பிரபலமாகி வருகிறது.
அது முக்கியமான சில கோல்ஃப் போட்டிகளை நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

