தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காற்பந்து: ஸ்பர்சின் வெற்றிநடை தொடர்கிறது

1 mins read
ed2d10a9-e61a-4e74-9535-c8239f1989e0
படம்: - ராய்ட்டர்ஸ்

லண்டன்: இந்தப் பருவத்தின் இங்கிலிஷ் பிரீமியர் லீக் போட்டியில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் குழுவின் வெற்றி நடை தொடர்கிறது.

புல்ஹாம் குழுவுக்கு எதிராக திங்கட்கிழமை இரவு நடந்த ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் அது வெற்றிபெற்றது.

ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் அணித் தலைவர் சன் ஹூங் மின் முதல் கோலை அடித்தார். அதன் பின்னர் 54வது நிமிடத்தில் ஜேம்ஸ் மேடிசன் இரண்டாவது கோலை அடித்தார்.

இந்தப் பருவத்தில் இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஸ்பர்ஸ் ஏழு ஆட்டங்களில் வெற்றியும் 2 ஆட்டத்தில் சமநிலையும்ண்டுள்ளது.

அதே நேரம் இந்தப் பருவத்தில் ஆர்சனலும் ஸ்பர்சும் இதுவரை தோல்வியடையவில்லை.

தற்போதைய நிலவரப்படி புள்ளிப்பட்டியலில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் 23 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் மான்செஸ்டர் சிட்டி (21), மூன்றாவது இடத்தில் ஆர்சனலும் (21) உள்ளன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்