நீச்சலில் சிங்கப்பூருக்கு வெள்ளிப் பதக்கம்

நீச்சலில் சிங்கப்பூருக்கு வெள்ளிப் பதக்கம்

1 mins read
bfe823c0-16f4-4c20-ab9b-648c2f457cc6
படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஹாங்ஜோ: சீனாவின் ஹாங்ஜோ நகரில் நடந்து வரும் ஆசிய உடற்குறையுள்ளோருக்கான விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூருக்கு முதல் பதக்கத்தை வென்று தந்துள்ளார் நீச்சல் வீரர் தோ வெய் சாங்.

எஸ் 7 பிரிவில் இடம்பெற்ற 400 மீட்டர் நீச்சல் போட்டியில் 25 வயது தோ வெள்ளிப்பதக்கம் வென்றார்.

தங்கப்பதக்கம் பிலிப்பீன்சுக்கு கிடைத்தது. வெண்கலப் பதக்கத்தை சீனா வென்றது.

ஆசியப் போட்டிகளில் இது தோவுக்கு நான்காவது பதக்கம். இதற்கு முன்னர் அவர் நீச்சலில் இரண்டு தங்கப் பதக்கத்தையும், ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.

குறிப்புச் சொற்கள்