தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெற்றியைத் தேடும் இங்கிலாந்து, இலங்கை

1 mins read
a12a6aa3-fbbe-442f-972f-dc8700a0b165
படம் - ஏஎஃப்பி

பெங்களூரு: உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் 25வது ஆட்டத்தில் இங்கிலாந்தும் இலங்கையும் வியாழக்கிழமை மோதுகின்றன.

ஆட்டம் மாலை 4.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி விளையாட்டரங்கில் நடக்கிறது.

இரு அணிகளும் இதுவரை நான்கு ஆட்டங்களில் விளையாடி மூன்று ஆட்டங்களில் தோல்வியையும் ஒரு வெற்றியையும் மட்டுமே பெற்றுள்ளன.

அதனால் இரண்டு அணிகளும் வெற்றிக்காகப் போராடக்கூடும்.

குறிப்பாக நடப்பு உலகக் கிண்ண வெற்றியாளர் இங்கிலாந்துக்கு பெரும் நெருக்கடி எழுந்துள்ளது.

நியூசிலாந்து. ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளிடம் மிகவும் மோசமாக தோற்று புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து 9ஆவது இடத்தில் உள்ளது.

இலங்கை அணி நெதர்லாந்தை வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது. இந்த ஆட்டத்தில் தோற்கும் அணிக்கு அதன் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் என்று கிரிக்கெட் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்