உலகக் கிண்ணக் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா சாதனை

உலகக் கிண்ணக் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா சாதனை

1 mins read
f4b1e54f-3e48-468a-88ea-c1a444a55c5c
படம்: - ஏஎஃப்பி

புதுடெல்லி: நெதர்லாந்துக்கு எதிரான உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 309 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியுள்ளது.

முதலில் பந்தடித்த ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் சதம் அடித்து அருமையான துவக்கம் தந்தார்.

அதன் பின்னர் இறுதிகட்டத்தில் கிளன் மேக்ஸ்வெல் 40 பந்துகளில் சதம் விளாச ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 399 ஓட்டங்கள் குவித்தது.

இமாலய இலக்கை விரட்டிய நெதர்லாந்து ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சில் தடுமாறியது.

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நெதர்லாந்து 21 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 90 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 309 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் எந்த ஓர் அணியும் இவ்வளவு அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றதில்லை.

இதுவரை ஐந்து ஆட்டங்களில் விளையாடியுள்ள ஆஸ்திரேலியா மூன்றில் வெற்றியும் இரண்டில் தோல்வியும் அடைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்