தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐந்து கோல்களை விளாசிய லிவர்பூல்; வரலாறு படைத்த பிரைட்டன்

1 mins read
1dbb69e4-a13c-4605-b760-8cc2ed965033
டுலூசுக்கு எதிரான ஆட்டத்தில் லிவர்பூலுக்கு கோல் போடும் ரயன் கிராவன்பர்க். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

லிவர்பூல்: யூயேஃபா யுரோப்பா லீக் காற்பந்துப் போட்டியில் பிரான்சின் டுலூஸ் குழுவுக்கு எதிரான பிரிவுச் சுற்று ஆட்டத்தில் 5-1 எனும் கோல் கணக்கில் அபார வெற்றியடைந்தது லிவர்பூல்.

டியோகோ ‌ஜோட்டா, வாட்டாரு என்டோ, டார்வின் நுனியெஸ், ரயன் கிராவன்பர்க், முகம்மது சாலா ஆகியோர் லிவர்பூலின் கோல்களைப் போட்டனர். முற்பாதியாட்டத்திலேயே லிவர்பூல் மூன்று கோல் வித்தியாசத்தில் முன்னணி வகித்தது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்பருவம் ஐரோப்பிய காற்பந்தின் ஆக உயரிய போட்டியாகக் கருதப்படும் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்கிற்குத் தகுதிபெறாத இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் குழுவான லிவர்பூல், அதை ஈடுகட்டவேண்டும் என்ற இலக்குடன் களமிறங்கியுள்ளது.

மற்றொரு பிரிமியர் லீக் குழுவான பிரைட்டன், அதன் யுரோப்பா லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தின் அயெக்ஸ் ஆம்ஸ்டர்டாமை 2-0 எனும் கோல் கணக்கில் வென்றது. தனது வரலாற்றில் முதன்முறையாக ஐரோப்பியப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ள பிரைட்டன், இப்போது ஐரோப்பிய போட்டி ஒன்றில் முதன்முறையாக வெற்றியும் கண்டுள்ளது.

ஆயெக்சுக்கு எதிரான ஆட்டத்தில் ‌ஜோவாவ் பெட்ரோ, அன்சு ஃபாட்டி ஆகியோர் பிரைட்டனின் கோல்களைப் போட்டனர்.

குறிப்புச் சொற்கள்