தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடைசிப் பந்தில் நியூசிலாந்து தோல்வி

1 mins read
8a2696c4-bf6b-498a-8099-9b6d48e22449
ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 67 பந்துகளில் 109 ஓட்டங்கள் விளாசினார். - படம்: ஏஎஃப்பி

தர்மசாலா: நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றுள்ளது.

சனிக்கிழமை தர்மசாலாவில் நடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி முதலில் பந்தடித்தது.

தொடக்க நிலை வீரர்கள் டேவிட் வார்னரும், டிராவிஸ் ஹெட்டும் அதிரடியாக ஓட்டங்கள் குவித்தனர். ஹெட் 67 பந்துகளில் 109 ஓட்டங்கள் விளாசினார்.

23ஆவது ஓவரில் 200 ஓட்டங்களைக் கடந்த ஆஸ்திரேலியா 450 ஓட்டங்களை எளிதில் எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதியில் 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆஸ்திரேலியா 388 ஓட்டங்கள் குவித்தது.

கடின இலக்கை விரட்டிய நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா 116 ஓட்டங்கள் எடுத்தார். கடைசிக் கட்டத்தில் ஜேம்ஸ் நீ‌ஷம் 58 ஓட்டங்கள் எடுத்தார்.

கடைசி பந்தில் 6 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்று இருந்த நிலையில் நியூசிலாந்து ஓட்டம் எதுவும் எடுக்கவில்லை. இறுதியில் நியூசிலாந்து 50 ஓவர்களில் 383 ஓட்டங்கள் எடுத்து 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

குறிப்புச் சொற்கள்