செல்சியைத் தோற்கடித்த பிரென்ட்ஃபர்ட்

செல்சியைத் தோற்கடித்த பிரென்ட்ஃபர்ட்

1 mins read
91d033fb-8bf5-464a-913b-d253dc68911c
செல்சி ஆட்டக்காரரைக் கடந்து செல்லும் பிரென்ட்ஃபர்ட ஆட்டக்காரர் நீல் மாவ்பே (வலது). - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டத்தில் செல்சியை அதன் சொந்த அரங்கிலேயே பிரென்ட்ஃபர் குழு 2-0 எனும் கோல் கணக்கில் தோற்கடித்தது.

கோல் போட கிடைத்த பல பொன்னான வாய்ப்புகளை நழுவவிட்ட செல்சிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

மற்றோர் ஆட்டத்தில் ஷெஃபீல்ட் யுனைடெட் குழுவை 5-0 எனும் கோல் கணக்கில் ஆர்சனல் பந்தாடியது.

உல்வ்ஸ் குழுவும் நியூகாசல் குழுவும் தரப்புக்கு இரண்டு கோல்கள் போட்டு சமநிலை கண்டன. கடந்த ஆறு ஆட்டங்களில் நியூகாசல் தோல்வியின் பிடியில் சிக்காமல் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

போர்ன்மத் குழுவிடம் பர்ன்லி குழு 2-1 எனும் கோல் கணக்கில் வீழ்ந்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்