தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2034 உலகக் கிண்ணக் காற்பந்தை சவூதி அரேபியா ஏற்று நடத்துவது கிட்டத்தட்ட உறுதி

1 mins read
de8c5b8e-6591-4b9d-80f1-cdd594c7f692
படம்: - ராய்ட்டர்ஸ்

மெல்பர்ன்: 2034 உலகக் கிண்ணக் காற்பந்தை சவூதி அரேபியா ஏற்று நடத்துவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

2034 உலகக் கிண்ணத்தை ஏற்று நடத்துவதற்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கும் கடைசி நாள் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 31).

இறுதி நாளான செவ்வாய்க்கிழமை அன்று ஆஸ்திரேலியா போட்டியை ஏற்று நடத்த தாம் விண்ணப்பிக்கப் போவதில்லை என்று அறிவித்தது.

2026 பெண்கள் ஆசிய கிண்ணத்தையும் 2029 காற்பந்துக் குழுக்களுக்கான உலகக்கிண்ணத்தை ஏற்று நடத்த ஆஸ்திரலியா விரும்புவதாகவும் அதனால் அதில் முழுக் கவனம் செலுத்தவிருப்பதாகவும் அது குறிப்பிட்டது.

இதற்கு முன்னர் சிங்கப்பூர், மலேசியா ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் இணைந்து 2034 உலகக் கிண்ணத்தை ஏற்று நடத்துவதற்கான விண்ணப்பம் செய்யப்போவதாக இந்தோனீசியா விருப்பம் தெரிவித்திருந்தது.

2034 உலகக் கிண்ணத்தை ஏற்று நடத்துவதற்கு சவூதி அரேபியா மட்டும்தான் விண்ணப்பம் செய்துள்ளது. அதனால் அனைத்துலக காற்பந்துக் கூட்டமைப்பு (ஃபிஃபா) விரைவில் சவூதி அரேபியா ஏற்று நடத்தும் என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய மூன்று கண்டங்களில் உள்ள ஆறு நாடுகள் 2030ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை ஏற்று நடத்தவுள்ளன.

உருகுவே, பராகுவே, அர்ஜெண்டினா, ஸ்பெயின், போர்ச்சுகல், மொரோக்கோ ஆகிய நாடுகளில் காற்பந்துத் திருவிழா அரங்கேறவிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

2026 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

குறிப்புச் சொற்கள்