புதுடெல்லி: இந்தியாவில் தற்போது உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன.
ரசிகர்களைக் கவரும் விதமாக ஆட்டத்தின் இடைவேளைகளிலும், ஆட்ட முடிவிலும் விளையாட்டரங்க்உகளில் கண்கவர் வாணவேடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
அண்மைய நாள்களாக மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் காற்றுத் தூய்மைக்கேடு அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், மும்பை, டெல்லி விளையாட்டரங்குகளில் வாணவேடிக்கைகள் இடம்பெறாது என்று அறிவித்துள்ளது.
டெல்லியில் இன்னும் ஓர் ஆட்டம் மட்டுமே நடக்கவுள்ளது. ஆனால், மும்பையில் இந்தியா - இலங்கை ஆட்டம், அரையிறுதி ஆட்டம் உள்ளிட்ட மூன்று ஆட்டங்கள் இடம்பெறவுள்ளன.
“டெல்லி, மும்பை நகரங்கள் காற்று மாசுபாட்டால் தடுமாறி வருகின்றன, வாண வேடிக்கைகள் மூலம் காற்று மாசை மேலும் அதிகரிக்க எங்களுக்கு விருப்பம் இல்லை. சுற்றுச்சூழல் மிக முக்கியமான ஒன்று. அதனால் இந்த முடிவை எடுத்துள்ளோம்,” என்று பிசிசிஐ தெரிவித்தது.