தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆஸ்திரேலியா திரும்பும் மிட்செல் மார்ஷ்; ஆஸ்திரேலிய அணிக்குப் பின்னடைவு

1 mins read
0b54fb32-28c7-4fed-a865-eae59ef03c5b
படம்: - ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிக்குத் தகுதி பெற ஆஸ்திரேலியா முனைப்புடன் உள்ளது.

வியாழக்கிழமை நிலவரப்படி அது பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

போட்டியின் தொடக்கத்தில் அவ்வணி எதிர்பார்த்த அளவுக்குச் செயல்படாதபோதிலும் பிறகு சுதாரித்துக்கொண்டு வெற்றிகளைப் பதிவு செய்தது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் சொந்த காரணங்களுக்காக ஆஸ்திரேலியா திரும்புகிறார் என்றும் சனிக்கிழமையன்று இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் ஆட்டத்தில் களமிறங்கமாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஆஸ்திரேலிய அணிக்குப் பின்னடைவாக அமையும் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்