தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‌‌உலகக் கிண்ணத்தில் ஷமி சாதனை

1 mins read
232f0d65-7fb6-4864-bf80-26368d70f757
இந்த உலகக் கிண்ணத்தில் 3 ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ள ஷமி 14 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார். - படம்: ராய்ட்டர்ஸ்

மும்பை: இந்திய வேகப் பந்துவீச்சாளர் முகமது ‌‌ஷமி உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறினார்.

வியாழக்கிழமை இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அதன் மூலம் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்த ‌‌சகீர் கான் (44), ஜவஹல் ஸ்ரீநாத் (44) சாதனையை முறியடித்தார் ‌‌ஷமி.

சகீர் கான் 23 உலகக் கிண்ண ஆட்டங்களிலும் ஸ்ரீநாத் 34 உலகக் கிண்ண ஆட்டங்களிலும் விளையாடியுள்ளனர்.

ஆனால் ‌‌ஷமி 14 ஆட்டங்களில் 45 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இந்த உலகக் கிண்ணத்தில் இந்தியாவின் முதல் நான்கு ஆட்டங்களில் ‌‌ஷமி விளையாடவில்லை. அதன் பின்னர் மூன்று ஆட்டங்களில் விளையாடிய ‌ஷமி, 14 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்