தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அசத்தும் ஆப்கானிஸ்தான்

1 mins read
3eb31106-30e4-4ba0-8553-fc754b5e2517
இதுவரை ஏழு ஆட்டங்களில் விளையாடியுள்ள ஆப்கானிஸ்தான் அணி நான்கில் வெற்றிபெற்றுள்ளது.  - படம்: ஏஎஃப்பி

லக்னோ: ஆப்கானிஸ்தான் அணி இந்த உலகக் கிண்ணத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

ஆப்கானிஸ்தானின் வெற்றிகளுக்கு முக்கிய காரணம் அவ்வணியின் சுழற்பந்துவீச்சும், தொடக்கநிலை பந்தடிப்பாளர்களின் அருமையான ஆட்டமும் தான். 

இதுவரை ஏழு ஆட்டங்களில் விளையாடியுள்ள அந்த அணி நான்கில் வெற்றிபெற்றுள்ளது.

வெள்ளிக்கிழமை லக்னோவில் நடந்த ஆட்டத்திலும் ஆப்கானிஸ்தான் அணி நெதர்லாந்தை எளிதாக வீழ்த்தியுள்ளது.

முதலில் பந்தடித்த நெதர்லாந்து 46.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ஓட்டங்கள் எடுத்தது.

சுலபமான இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் தொடக்கத்தில் திணறினாலும் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

இறுதியில் அது 31.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 181 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் அதன் அரையிறுதி கனவு தொடர்கிறது.

ஆப்கானிஸ்தானுக்கு இன்னும் இரண்டு ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. அதில் பலம்வாய்ந்த ஆஸ்திரேலியாவைவும் தென்னாப்பிரிக்காவையும் அது சந்திக்கவுள்ளது.

இந்த இரு ஆட்டங்களிலும் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றால் அதன் அரையிறுதி வாய்ப்பு அதிகரிக்கும்.

குறிப்புச் சொற்கள்