தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தென்னாப்பிரிக்கா உள்ளே; இங்கிலாந்து வெளியே

1 mins read
1349732d-6eab-4611-83ea-ae05b82a7bcb
இதுவரை ஏழு ஆட்டங்களில் விளையாடியுள்ள இங்கிலாந்து ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

அகமதாபாத்: உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் நடப்பு வெற்றியாளரான இங்கிலாந்து போட்டியில் இருந்து வெளியேறியது.

சனிக்கிழமை மாலை அகமதாபாத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோதிய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதுவரை ஏழு ஆட்டங்களில் விளையாடியுள்ள இங்கிலாந்து ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அந்த அணிக்கு இன்னும் இரண்டு ஆட்டங்கள் உள்ளன. அதில் ஒன்றில் வெற்றி பெற்றாலும் அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா தகுதிபெறும்.

மேலும் இந்தியாவைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்க அணியும் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவும் அரையிறுதிக்குள் நுழைந்துவிடும் என்பதால் கடைசி இடத்திற்கு பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்