தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காற்று மாசு: இலங்கை, பங்ளாதே‌ஷ் பயிற்சி ரத்து

1 mins read
5c53baf0-6518-484f-a51a-df5fa491c362
படம்: - பிடிஐ

புதுடெல்லி: உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் 38ஆவது ஆட்டம் டெல்லி விளையாட்டரங்கில் திங்கட்கிழமை மாலை இடம்பெறுகிறது.

அதில் இலங்கை, பங்ளாதே‌ஷ் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் டெல்லியில் சனிக்கிழமை கடுமையான காற்று மாசு ஏற்பட்டது. அதனால் இலங்கை, பங்ளாதே‌‌ஷ் அணிகளின் பயிற்சி ரத்து செய்யப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமையும் நிலைமை மோசமாக இருந்ததாக இந்திய ஊடகங்கள் கூறின.

நிலைமையை அணுக்கமாகக் கவனித்து வருவதாகவும் விளையாட்டு வீரர்களின் உடல்நலம் தான் முக்கியம் என்றும் அனைத்துலக கிரிக்கெட் மன்றம் தெரிவித்துள்ளது.

காற்றுத் தரம் மோசமாக இருந்தால் ஆட்டம் கைவிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்