தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

யுனைடெட், சிட்டி வெற்றி; ஆர்சனல் தோல்வி

1 mins read
4ffb6837-e042-41cb-ac74-369dc675a025
மான்செஸ்டர் சிட்டி 6 -1 என்ற கோல் கணக்கில் போர்ன்மோத்தை வீழ்த்தியது. - படம்: இபிஏ

லண்டன்: இங்கிலிஷ் பிரீமியர் லீக் போட்டியில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற ஆட்டங்களில் மான்செஸ்டர் சிட்டி, மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் வெற்றிபெற்றன.

புல்ஹாம் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் 1- 0 என்ற கோல் கணக்கில் வாகை சூடியது. ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் யுனைடெட் அணித் தலைவர் புருனோ பெர்ணான்டஸ் கோல் அடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி குழு போர்ன்மோத்தை பந்தாடியது.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கத்தை செலுத்திய சிட்டி 6 -1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

ஆர்சனல் குழு நியூகாசல் யுனைடெட் அணியுடன் 1-0 அதிர்ச்சி தோல்வியடைந்தது.

குறிப்புச் சொற்கள்