மும்பை: ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பந்தடிப்பாளரும், ஆல்ரவுண்டரான மிட்சல் மார்ஷ் மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.
அவர் செவ்வாய்க்கிழமை மும்பையில் நடக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ஷ் கடந்த வாரம் திடீரென தாயகம் திரும்பினார். அவர் உலகக் கிண்ணத்தில் மீண்டும் பங்கேற்பாரா என்று கேள்விகள் எழுந்தன.
அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், மார்ஷ் சென்ற ஞாயிற்றுக்கிழமை அணியில் மீண்டும் இணைந்துவிட்டதாகத் தகவல் வெளியானது.
மார்ஷின் தாத்தா காலமானதால் அவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அவர் பெர்த் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆஸ்திரேலிய அணியில் மார்ஷ் இல்லாதது பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. தற்போது அவர் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளதால் ஆஸ்திரேலியா பலம் வாய்ந்த அணியாக காட்சியளிக்கிறது.

