புதுடெல்லி: இலங்கை கிரிக்கெட் அணியின் பந்தடிப்பாளர் ஏஞ்சலோ மேத்யூஸ் தமக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் பங்ளாதேஷ் அணித் தலைவர் ஷாகிப் அல் ஹாசனை ‘ஏமாற்றுப் பேர்வழி’ என்றும் தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை மாலை புதுடெல்லியில் நடந்த உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆட்டத்தில் பங்ளாதேஷ்-இலங்கை அணிகள் மோதின.
அப்போது நேரம் கடத்துதல் (Timed out) முறையில் மேத்யூஸ் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
இதனால் ஆட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தாம் சரியான நேரத்திற்கு களத்திற்கு வந்து பந்தடிக்க நின்றதாக மேத்யூஸ் தெரிவித்துள்ளார்
தலைக்கவசத்தில் பிரச்சினை இருந்ததால்தான் தாம் பந்தடிப்பில் இருந்து விலகியதாக அவர் கூறினார்.
அதற்கு சான்றாக மேத்யூஸ் காணொளி ஒன்றையும் சமூக ஊடகத்தில் பதிவேற்றியுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கெளதம் காம்பீர், டேல் ஸ்டெய்ன், முகம்மது கைஃப், வாக்கர் யூனுஸ் போன்ற பலர் மேத்யூசுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
அதே நேரம் பங்ளாதேஷின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும் உள்ளனர்.
இந்நிலையில், இலங்கை அணி அந்த ஆட்டத்தில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
அதனால், இந்த உலகக் கிண்ணத் தொடரில் இருந்து இலங்கை வெளியேறியது.
ஆட்டம் முடிந்த பிறகு இலங்கை வீரர்கள் பங்ளாதேஷ் அணி வீரர்களுடன் கைகுலுக்கவில்லை. இது மேலும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.