லண்டன்: செவ்வாய்க்கிழமை இரவு நடந்த சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் பார்சிலோனா, நியூகாசல் யுனைடெட், பிஎஸ்ஜி போன்ற முன்னணிக் குழுக்கள் தோல்வியைத் தழுவின.
பார்சிலோனா குழு உக்ரேனைச் சேர்ந்த ஷக்தர் டொனட்ஸ்க் குழுவிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோற்றது.
நியூகாசல் குழு, ஜெர்மனியின் பொருசியா டோர்ட்மண்ட் குழுவிடம் 2-0 என்று தோல்வியைச் சந்தித்தது.
ஏசி மிலான் குழுவிடம் 2-1 என்ற கோல் கணக்கில் பிஎஸ்ஜி குழு தோற்றது.
நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டி 3-0 என்று சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த யங் பாய்ஸ் குழுவை வீழ்த்தியது.
அட்லெட்டிகோ மட்ரிட் 6-0 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்தின் செல்டிக் குழுவைப் பந்தாடியது.