அகமதாபாத்: உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் 42ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் மோதுகிறது ஆப்கானிஸ்தான்.
ஏற்கெனவே அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள தென்னாப்பிரிக்கா ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை பயிற்சி ஆட்டம் போல் ஆடக்கூடும்.
இருப்பினும் இந்தியாவுக்கு எதிராக மோசமான பந்தடிப்பை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்கா இந்த ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிய அணிகளுடன் திணறுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்திடம் தோற்று அதிர்ச்சியை எழுப்பியது. அதனால் ஆப்கானிஸ்தான் அணியுடன் அது சற்று கவனமாக விளையாடக்கூடும்.
இலக்கை விரட்டும் போது தென்னாப்பிரிக்கா தடுமாறுவதால் இந்த ஆட்டத்தில் அது இரண்டாவதாக பந்தடிக்க நினைக்கும்.
ஆஸ்திரேலியாவை வீழ்த்தக் கிடைத்த அரிய வாய்ப்பை தவறவிட்ட சோகத்தில் உள்ளது ஆப்கானிஸ்தான்.
ஆஸ்திரேலியாவுடன் தோற்றதால் ஆப்கானிஸ்தான் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட கைநழுவிப் போனதாகப் பார்க்கப்படுகிறது.
இருப்பினும் ஆப்கானிஸ்தான் தொடர்ந்து எழுச்சிகாணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்த உலகக் கிண்ணத்தில் சிறப்பான பந்துவீச்சைக் கொண்ட அணிகளில் ஆப்கானிஸ்தானும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.