லண்டன்: வியாழக்கிழமை அதிகாலை நடந்த சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் டென்மார்க்கின் கோப்பன்ஹேகன் குழுவிடம் மான்செஸ்டர் யுனைடெட் தோற்றது.
ஆட்டத்தின் 3வது நிமிடத்திலும் 28வது நிமிடத்திலும் கோல்கள் அடித்து முன்னிலை பெற்றிருந்தது யுனைடெட். ஆட்டத்தின் 42 வது நிமிடத்தில் மார்க்கஸ் ராஷ்ஃபர்டுக்கு சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டது.
இருப்பினும் கோப்பன்ஹேகன் ஆட்டத்தின் முதல் பாதியின் இறுதியில் அதிரடியாக இரண்டு கோல்களை அடிக்க ஆட்டம் விறுவிறுப்பாக நகர்ந்து.
அதன் பின்னர் 69வது நிமிடத்தில் யுனைடெட் அணித் தலைவர் புருனோ பெர்ணான்டஸ் கோல் அடித்து அணியை முன்னிலை பெறச் செய்தார்.
முதல் பாதியில் செய்ததைப் போலவே கோப்பன்ஹேகன் ஆட்டத்தின் இறுதிகட்டத்தில் இரண்டு கோல்களை அடித்து வெற்றிபெற்றது.
இந்த தோல்வியின் மூலம் சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்திற்கான ‘எ’ பிரிவில் மான்செஸ்டர் யுனைடெட் 3 புள்ளிகளுடன் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது.