பெங்களூரு: இந்தியாவில் நடந்து வரும் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்தின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
பெங்களூருவில் வியாழக்கிழமை நடந்த ஆட்டத்தில் இலங்கை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து.
முதலில் பந்தடித்த இலங்கை, நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில் அந்த அணி 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இலக்கை அதிரடியாக விரட்டிய நியூசிலாந்து பந்தடிப்பாளர்கள் 23.2 ஓவர்களில் 172 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தனர்.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் நான்காவது இடத்திற்கு முன்னேறியது நியூசிலாந்து.
நியூசிலாந்து அணியின் ஓட்டங்கள் விகிதம் நன்றாக இருப்பதால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளின் அரையிறுதி வாய்ப்புகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன.
இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் ஏற்கெனவே தகுதிபெற்றுவிட்டன.
தொடர்புடைய செய்திகள்
முதல் அரையிறுதி ஆட்டம் நவம்பர் 15ஆம் தேதி மும்பையிலும் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நவம்பர் 15ஆம் தேதி கோல்கத்தாவிலும் நடக்கிறது.