தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐரோப்பா லீக்: லிவர்பூல் அதிர்ச்சித் தோல்வி

1 mins read
a02d1e1d-6d56-4e0d-b7c8-1038351d76e9
படம்: - ஏஎஃப்பி

பாரிஸ்: ஐரோப்பா லீக் கிண்ண ஆட்டத்தில் லிவர்பூல் அணி பிரெஞ்சு குழுவான டூலூஸ் அணியிடம் 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியைச் சந்தித்துள்ளது.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம்  செலுத்திய டூலூஸ் 36, 58, 76 ஆகிய நிமிடங்களில் கோல் அடித்தது.

லிவர்பூல் அணி 74வது நிமிடத்திலும் 89வது நிமிடத்திலும் கோல் அடித்தது. 

கடந்த மாதம் இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் லிவர்பூல் 5-1 என்று டூலூஸ் அணியைத் தோற்கடித்தது. தற்போது டூலூஸ் அதன் சொந்த மண்ணில் லிவர்பூல் அணியை பழிக்குப் பழி வாங்கியுள்ளது.

இருப்பினும் பிரிவு ‘இ’ புள்ளிப்பட்டியலில் 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. டூலூஸ் 7 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்