தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிரிக்கெட்: அரையிறுதி ஆட்டங்களை நடத்த தயாராகும் மும்பை, கோல்கத்தா

1 mins read
b7e23ff1-b18d-446c-9546-02cb1ee1b8c2
இரு ஆட்டங்களுக்கான அனைத்து நுழைவுச்சீட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டதால் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

மும்பை: இந்தியாவில் நடந்து வரும் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் குழு சுற்று ஆட்டங்கள் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தது.

புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.

முதல் அரையிறுதி ஆட்டம் மும்பையின் வான்கடே விளையாட்டரங்கில் நவம்பர் 15ஆம் தேதி சிங்கப்பூர் நேரப்படி மாலை 4:30 மணிக்கு தொடங்குகிறது. இதில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதுகின்றன.

இரண்டாவது அரையிறுதி ஆட்டம் கோல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் விளையாட்டரங்கில் நவம்பர் 16ஆம் தேதி சிங்கப்பூர் நேரப்படி மாலை 4:30 மணிக்கு தொடங்குகிறது. இதில் தென்னாப்பிரிக்காவும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.

இரு ஆட்டங்களுக்கான அனைத்து நுழைவுச்சீட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டதால் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் விளையாட்டரங்குகளை சுற்றி பாதுகாப்புப் பணிகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

அரையிறுதியில் வெற்றிபெறும் அணிகள் நவம்பர் 16ஆம் தேதி அகமதாபாத்தில் உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் விளையாடும்.

குறிப்புச் சொற்கள்