தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மான்செஸ்டர் சிட்டி - செல்சி ஆட்டத்தில் கோல் மழை

1 mins read
d7e61815-ad0a-438c-be20-e0ad5eec0208
ஆட்டத்தின் இறுதிகட்டத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார் பால்மர். - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: இங்கிலிஷ் பிரீமியர் லீக் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு இடம்பெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டியை செல்சி எதிர்கொண்டது.

பரபரப்பாக நடந்த இந்த ஆட்டம் 4-4 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் கடுமையாகப் போட்டிக்கொடுத்தனர். சிட்டியின் ஹாலண்ட் 25ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். அதற்கு பதிலடியாக செல்சி 29, 37 நிமிடங்களில் கோல் அடித்தது.

ஆட்டத்தின் 45ஆவது நிமிடத்திலும் 47ஆவது நிமிடத்திலும் கோல் அடித்து சிட்டி மீண்டும் முன்னிலை பெற்றது. செல்சியின் நிக்கோலஸ் ஜாக்சன் 67ஆவது நிமிடத்தில் கோல் அடிக்க ஆட்டத்தில் அனல் பறக்கத் தொடங்கியது.

86ஆவது நிமிடத்தில் மீண்டும் சிட்டி கோல் அடித்து அசத்தியது. இறுதிகட்டத்தில் செல்சி அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை பால்மர் கோலாக மாற்ற ஆட்டம் சமநிலையில் முடிந்தது.

புள்ளிப்பட்டியலில் மான்செஸ்டர் சிட்டி 27 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்