தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புண்டஸ்லிகாவின் முதல் பெண் துணைப் பயிற்றுவிப்பாளர்

1 mins read
6d3415de-a7d2-4578-95e2-d66f80d5f00b
யூனியன் பெர்லின் குழுவின் துணை பயிற்றுவிப்பாளராக மேரி-லூயிஸ் எட்டா. - படம்: மத்தாயஸ் கோக் / இமாகோ

பெர்லின்: ஜெர்மனியின் ஆக உயரிய ஆண்கள் காற்பந்து லீக்கான புண்டஸ்லிகாவில் முதன்முறையாக பெண் பயிற்றுவிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

புண்டஸ்லிகாவில் போட்டியிடும் யூனியன் பெர்லின் குழு தனது துணைப் பயிற்றுவிப்பாளராக மேரி-லூயிஸ் எட்டா எனும் பெண்ணை நியமித்துள்ளது. பெண் துணைப் பயிற்றுவிப்பாளரை நியமித்த முதல் புண்டஸ்லிகா குழு என்ற பெருமையைப் பெற்றுள்ளது யூனியன் பெர்லின்.

லீக்கில் தொடர்ந்து ஒன்பது ஆட்டங்களில் தோல்வியடைந்ததால் யூனியன் அதன் நிர்வாகி அர்ஸ் ஃபி‌ஷரைப் பணிநீக்கம் செய்தது. அதனைத் தொடர்ந்து எட்டாவைத் துணைப் பயிற்றுவிப்பாளராக நியமித்தது.

எட்டா, விளையாட்டாளராக இருந்த காலத்தில் தான் ஆடிய குழுக்களில் பல கிண்ணங்களையும் பதக்கங்களையும் வென்ற காற்பந்து வீராங்கனை ஆவார்.

யூனியனின் இளையர்களுக்கான குழுவின் பயிற்றுவிப்பாளர் மாக்ர்க்கோ குரோட்ட இடைக்கால நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்ற லீக் பருவத்தில் பட்டியலில் நான்காவது இடத்தில் முடித்த யூனியன் இப்பருவம் தற்போது கடைசி இடத்தில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்