நியூசிலாந்தை வெளியேற்றிய இந்தியா

நியூசிலாந்தை வெளியேற்றிய இந்தியா

1 mins read
26213a29-a046-45a3-984c-4b6741e3ebc9
நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றியைக் கொண்டாடும் இந்திய வீரர்கள். - படம்: ஏஎஃப்பி

மும்பை: இவ்வாண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியின் இறுதியாட்டத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது.

மும்பையின் வான்கடே விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் 70 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது இந்தியா.

முதலில் பந்தடித்த இந்தியா நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 397 ஓட்டங்களைக் குவித்தது. நியூசிலாந்தின் வெற்றி இலக்கு 398ஆக இருந்தது.

ஆனால் விட்டுக்கொடுக்காமல் விளையாடியது நியூசிலாந்து. அந்த அணி 220 ஓட்டங்களை எடுத்தபோது இந்தியா விக்கெட்டுகளை வெளியேற்ற சிரமப்பட்டது.

சென்ற ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியின் அரையிறுதியாட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது இந்தியா. இம்முறையும் அவ்வாறு நிகழுமோ என்ற அச்சம் தலைதூக்கியது.

ஆனால் சரியான நேரத்தில் நியூசிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சனை வெளியேற்றி இந்தியாவுக்கு நம்பிக்கை ஊட்டினார் நட்சத்திர பந்துவீச்சாளர் முகம்மது ‌ஷாமி. 69 ஓட்டங்கள் எடுத்த பிறகு வில்லியம்சன் வெளியேற்றப்பட்டார்.

அதன் பிறகு நியூசிலாந்தின் ஓட்ட விகிதம் குறையத் தொடங்கியது.

48.5 ஓவர்களில் நியூசிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ஓட்டங்களை எடுத்தது.

குறிப்புச் சொற்கள்