ரஜினி வரார் கவனி

ரஜினி வரார் கவனி

1 mins read
900dba72-9c91-40b8-9993-8cef858d0720
இந்தியா-நியூசிலாந்து ஆட்டத்தை நேரில் கண்டு களித்த ரஜினிகாந்த் (வலமிருந்து மூன்றாவது). - படம்: செளந்தர்யா ரஜினிகாந்த் / எக்ஸ்
Google News Preferred Icon

மும்பை: இந்தியாவும் நியூசிலாந்தும் மோதிய ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியின் அரையிறுதியாட்டம் திரைப்பிரபலங்களையும் ஈர்த்துள்ளது.

ஆட்டத்தை நேரில் சென்று கண்டு களித்தார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

தனது மனைவி லதா ரஜினிகாந்த், அவரின் சகோதரரும் பிரபல இசையமைப்பாளர் அனிருத்தின் தந்தையுமான ரவி ராகவேந்திரா ஆகிய இருவருடன் ரஜினி மும்பையின் வான்கடே விளையாட்டரங்கில் ஆட்டத்தைப் பார்த்தார்.

அவர்கள் இருந்த படத்தை ரஜினியின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் எக்ஸ் சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொண்டார்.

ஆட்டத்தில் நியூசிலாந்தை வென்று இறுதியாட்டத்துக்கு முன்னேறியது போட்டியை ஏற்று நடத்தும் இந்தியா.

குறிப்புச் சொற்கள்
விளையாட்டுகிரிக்கெட்இந்தியாதிரைச்செய்திநியூசிலாந்துஅனிருத்உலகக் கிண்ணம்