தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காற்பந்து: பிரேசில், அர்ஜென்டினா தோல்வி

1 mins read
3848d69d-4358-43fb-a5ed-88cc8fe84635
கொலம்பியாவின் லூயிஸ் டியாஸ் 75, 79ஆவது நிமிடங்களில் கோல் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.  - படம்: இபிஏ

ரியோ: உலகக் கிண்ண காற்பந்துக்கான தகுதி ஆட்டத்தில் கொலம்பிய அணியிடம் பிரேசில் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியுள்ளது.

ஆட்டத்தின் நான்காவது நிமிடத்தில் முதல் கோலை அடித்து முன்னிலை பெற்றது பிரேசில்.

ஆனால் கொலம்பியாவின் லூயிஸ் டியாஸ் 75, 79ஆவது நிமிடங்களில் கோல் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

பிரேசில் தொடர்ந்து இரண்டாவது முறையாக தகுதி ஆட்டத்தில் தோல்வியடைந்து பின்தங்கியுள்ளது.

தென்னமெரிக்க நாடுகளுக்கான தகுதி ஆட்ட புள்ளிப்பட்டியலில் தற்போது பிரேசில் 7 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கொலம்பியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

போனஸ் ஏரிசில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணியை உருகுவே 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது உருகுவே.

புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது அர்ஜென்டினா.

குறிப்புச் சொற்கள்