தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காற்பந்து: குவைத்தை வென்ற இந்தியா

1 mins read
e8f506b7-e7f4-416d-ba0e-8d7f0847db41
கோப்புப்படம்: - இந்திய ஊடகம்

குவைத்: ஆசிய நாடுகளுக்கான உலகக் கிண்ண காற்பந்து தகுதி ஆட்டத்தின் இரண்டாவது சுற்றில் இந்திய அணி குவைத்தை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

ஆட்டம் குவைத்தின் ஜபீர் அல்அகமது விளையாட்டரங்கில் வியாழக்கிழமை இரவு நடந்தது.

இந்தியாவின் மன்வீர் சிங் 75வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் குவைத் வீரர்கள் அதிரடியாக விளையாடி கோல் அடிக்க முயற்சி செய்தனர். 94வது நிமிடத்தில் குவைத்தின் பைசல் சாயித்திற்கு சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டது.

இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்தியா வரும் 21ஆம் தேதி புவனேஷ்வரில் கத்தாரை எதிர்த்து விளையாடவுள்ளது.

இந்தியா இதுவரை உலகக் கிண்ண காற்பந்து தகுதி ஆட்டத்தின் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியதில்லை. இம்முறை மூன்றாவது சுற்றுக்கு தகுதிபெற இந்தியா மும்முரமாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்