தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆர்சனல் நிர்வாகி மீது நடவடிக்கை

1 mins read
34a39646-ff0e-48f8-a507-46e75bf4820c
ஆர்சனல் நிர்வாகி மிக்கல் ஆர்டெட்டா  - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: ஆர்சனல் குழுவின் நிர்வாகியான மிக்கல் ஆர்டெட்டா மீது காற்பந்து சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அண்மையில் ஆர்சனல் அணி நியூகாசல் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

அந்த ஆட்டத்தில் ஆர்சனல் அடித்த கோல் ‘விஏ­ஆர்’ எனப்­படும் காணொளி உதவி நடு­வர் தொழில்­நுட்­பம் மூலம் நிராகரிக்கப்பட்டது.

இதனால் கோபமடைந்த ஆர்டெட்டா போட்டி முடிந்த பின் ஆட்ட நடுவர்களை கடுமையாக கண்டித்தார்.

விதிமுறைகளை மீறி ஆட்ட நடுவர்களை அவமதித்ததாக ஆர்டெட்டா மீது காற்பந்து சங்கம் தற்போது குற்றஞ்சாட்டியுள்ளது.

குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க நவம்பர் 21ஆம் தேதிவரை ஆர்டெட்டாவுக்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்