தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெலிங்ஹம்முக்கு ‘2023 தங்க மகன்’ விருது

1 mins read
b8146394-1e48-4a3d-a2a0-fd1b03912871
கடந்த ஜூன் மாதம் ரியால் மட்ரிட்டில் இணைந்தார் ஜூட் பெலிங்ஹம். - படம்: ராய்ட்டர்ஸ்

மட்ரிட்: இங்கிலாந்துக் காற்பந்து அணியின் மத்தியத் திடல் ஆட்டக்காரரான 20 வயது ஜூட் பெலிங்ஹம்முக்கு ‘2023 தங்க மகன்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

21 வயதுக்கு உட்பட்டோரை இவ்விருது அங்கீகரிக்கிறது.

கடந்த ஜூன் மாதம் 103 மில்லியன் யூரோ (S$112 மி.) கட்டணத்தில் பொருஷியா டோர்மண்ட் குழுவிலிருந்து வெளியேறி ரியால் மட்ரிட்டில் இணைந்துள்ள இவர், ஸ்பானிய காற்பந்து லீக்கில் இதுவரை விளையாடியுள்ள 11 ஆட்டங்களில் 10 கோல்களைப் போட்டு முன்னணி வகிக்கிறார். மேலும், மூன்று சாம்பியன்ஸ் லீக் ஆட்டங்களில் மூன்று கோல்களையும் இவர் அடித்துள்ளார்.

வெய்ன் ரூனி, லயனல் மெஸ்ஸி, ரஹீம் ஸ்டெர்லிங், கிலியன் இம்பாப்பே, எர்லிங் ஹாலண்ட். பெட்ரோ, காவி உள்ளிட்டோர் இதற்கு முன்னர் ‘தங்க மகன்’ விருதை வென்றிருந்தனர்.

இதற்கிடையே, மட்ரிட்டின் தாக்குதல் ஆட்டக்காரரான லிண்டா கைசிடோ, 18, ‘தங்க மகள்’ விருதை வென்றுள்ளார்.

குறிப்புச் சொற்கள்