இறுதிப் போட்டியைப் பார்க்கமாட்டேன்: தென்னாப்பிரிக்கப் பயிற்றுநர் வால்டர்

இறுதிப் போட்டியைப் பார்க்கமாட்டேன்: தென்னாப்பிரிக்கப் பயிற்றுநர் வால்டர்

1 mins read
0a4df589-4b68-4941-b6d1-d318dc5e3dc5
தென்னாப்பிரிக்க அணியின் பயிற்றுநர் ராப் வால்டர். - படம்: இந்திய ஊடகம்

கோல்கத்தா: உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் வியாழக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை தென்னாப்பிரிக்கா இழந்தது.

இதனால், ஐந்தாவது முறையாக ‘நாக் அவுட்’ சுற்றில் தோற்று அந்த அணி வெளியேறியது.

போட்டி முடிவடைந்ததும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் ராப் வால்டர் பேசுகையில், “உலகக் கிண்ண இறுதிப் போட்டியைப் பார்க்க மாட்டேன்,” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “இறுதிப்போட்டி குறித்து எனக்குக் கவலை இல்லை. இருப்பினும், சொந்த மண்ணில் இந்திய அணி கிண்ணத்தைக் கைப்பற்றுவது பொருத்தமானதாக இருக்கும்.

“சொந்த மண்ணில் நடைபெறுவதால் இந்திய அணி உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆஸ்திரேலியாவும் திறமையான அணி என்பதுடன் கிண்ணத்தை வெல்லும் திறன் கொண்ட அணிதான்,” என்று சொன்னார்.

குறிப்புச் சொற்கள்