ரோம்: ஆண்கள் டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நட்சத்திர வீரர் நோவாக் ஜோக்கோவிச் ‘ஏடிபி’ போட்டிக்கான இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஜோக்கோவிச் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் கார்லோஸ் அல்காராசை வீழ்த்தினார்.
அதன் மூலம் ஏடிபி’ போட்டிக்கான இறுதிச்சுற்றில் 9வது முறையாக ஜோக்கோவிச் விளையாடுகிறார். இறுதிச்சுற்றில் ஜானிக் சின்னரை, ஜோக்கோவிச் எதிர்கொள்கிறார்.
இதற்கு முன்னர் நடந்த முதல் சுற்றில் ஜோக்கோவிச், சின்னரிடம் தோல்வியடைந்தார். அதனால் இறுதி ஆட்டத்தில் அவர் கூடுதலாக கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
36 வயதான ஜோக்கோவிச் இதுவரை 24 முறை பொதுவிருதுப் பட்டங்களை வென்று அசத்தியுள்ளார். இந்த ஆண்டு மட்டும் மூன்று பொது விருதுகள் உட்பட 7 விருதுகளை ஜோக்கோவிச் வென்றுள்ளார்.
இதுவரை ஜோக்கோவிச் 7 முறை ‘ஏடிபி’ போட்டி கிண்ணத்தை வென்றுள்ளார்.

