பாரிஸ்: யூரோ 2024 கிண்ணத்திற்கான தகுதி ஆட்டத்தில் பிரெஞ்சு காற்பந்து அணி ஜிப்ரால்டாரை 14-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது.
ஆட்டத்தில் 18ஆவது நிமிடத்தில் ஜிப்ரால்டர் அணியின் வீரருக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது. அதனால் அந்த அணி 10 வீரர்களுடன் தடுமாறியது.
இதை நன்றாகப் பயன்படுத்திக்கொண்ட பிரான்ஸ் ஆட்டத்தின் முதல் பாதியின் முடிவில் 7 கோல்கள் அடித்தது.
இரண்டாவது பாதியிலும் பிரான்ஸ் கோல் மழை பொழிந்தது. இறுதியில் 14 கோல்கள் அடித்த பிரனாஸ் அசத்தலான வெற்றிபெற்றது.
நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே ‘ஹாட்ரிக்’ அடித்தார்.
இதற்கு முன்னர் பிரான்ஸ் 1995ஆம் ஆண்டு அஜர்பைஜானை 10-0 என வீழ்த்தி சாதனை படைத்திருந்தது. அதை இப்போது பிரான்ஸ் முறியடித்துள்ளது.