லாஸ் வேகஸ்: இந்த பருவத்தின் எஃப் 1 கார் பந்தயத்தில் ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் வெற்றிநடை தொடர்கிறது.
லாஸ் வேகஸ் பந்தயத்திலும் வெற்றிபெற்று அசத்தியுள்ளார் வெர்ஸ்டாப்பன்.
தொடக்கத்தில் இருந்தே பந்தயம் பரபரப்பாக இருந்தது. கடும் குளிர், இரவு நேரம் என ஓட்டுநர்களுக்கு பல சவால்கள் இருந்தன.
கூடுதலாக விதிமுறைகளை மீறியதற்காக வெர்ஸ்டாப்பனுக்கு 5 நொடிகள் அபராதமாக விதிக்கப்பட்டது.
இருப்பினும் சிறப்பாக செயல்பட்டு இப்பருவத்தில் 18வது முறையாக வெற்றிக் கனியை ருசித்தார் வெர்ஸ்டாப்பன்.
இரண்டாவது இடத்தில் ஃபெராரி அணியின் சார்ல்ஸ் லெக்லர்க் வந்தார்.
ரெட் புல் குழுவின் செர்ஜியோ பெரசுக்கு மூன்றாவது இடம் கிடைத்தது.
வெர்ஸ்டாப்பன் ஏற்கெனவே இப்பருத்திற்கான வெற்றியாளர் கிண்ணத்தை கைப்பற்றிவிட்டார்.

