மும்பை: உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய வீரர்கள் அதிக உற்சாகத்தில் உள்ளனர்.
திடலில் கொண்டாட்டத்தை முடித்த பிறகும் ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்கள் விளையாட்டரங்கில் உள்ள அறைகளில் கொண்டாட்டத்தைத் தொடர்ந்தனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணித் தலைவர் பேட் கம்மின்ஸ் தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெற்றிக் கொண்டாட்டப் படங்கள் சிலவற்றைப் பகிர்ந்திருந்தார்.
அதில், ‘ஆல் ரவுண்டர்’ மிட்செல் மார்ஷ் கையில் மதுபானத்துடன், தமது கால்களை உலகக் கிண்ணத்தின்மீது வைத்து இருந்த படமும் ஒன்று.
அந்தப் படத்தால் தற்போது பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
குறிப்பாக கிரிக்கெட் ரசிகர்கள் மார்ஷின் இந்த நடவடிக்கையைக் கடுமையாக கண்டித்துள்ளனர்.
விளையாட்டு மீதும் உலகக் கிண்ணத்தின் மீதும் இருக்கும் மரியாதையை மார்ஷ் மதிக்கவில்லை என்று சமூக ஊடகங்களில் ரசிகர்கள் சாடியுள்ளனர்.
இந்த உலகக் கிண்ணத்தில் 10 ஆட்டங்களில் விளையாடிய மார்ஷ் 441 ஓட்டங்கள் குவித்தார். பாகிஸ்தான், பங்ளாதேஷ் அணிகளுக்கு எதிராக சதம் விளாசினார்.

