உலகக் கிண்ணப் போட்டியைப் பெரிய திரையில் கண்டுகளித்த வெளிநாட்டு ஊழியர்கள்

வெளிநாட்டு ஊழியர்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நிறைவுபெற்றன.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு மத்தியில் 50,000 வெளிநாட்டு ஊழியர்களைச் சென்றடையும் நோக்கத்தில் சிங்டெல், வெளிநாட்டு ஊழியர்கள் நிலையம் இணைந்து இப்போட்டிகளுக்கு ஏற்பாடு செய்தன.

அக்டோபர் 8ஆம் தேதி கொக்ரேன் பொழுதுபோக்கு நிலையத்தில் தொடங்கிய போட்டிகள், சுங்கை தெங்கா தங்குமிடத்திலும் பெஞ்சுரு பொழுதுபோக்கு நிலையத்திலும் தொடர்ந்தன.

மூன்று இடங்களிலும் வெற்றிபெற்ற அணிகள் இறுதிப் போட்டியில் சூன் லீ பொழுதுபோக்கு நிலையத்தில் மோதின. பங்ளாதேஷ் விளையாட்டாளர்களைக் கொண்ட ‘தேசி பாய்ஸ்’ அணி வாகைசூடியது.

அவர்கள் $2,000 ரொக்கமும் ‘புரொஜெக்டர்’ திரையரங்கில் பெரிய திரையில் உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தைக் காணும் வாய்ப்பையும் வென்றனர்.

உலகக் கிண்ணப் போட்டியைப் பெரிய திரையில் கண்டு களித்தோர். லிட்டில் இந்தியாவில் பங்கேற்கும் கடைகளில் சிங்டெல் முன்பணம் செலுத்தப்பட்ட ‘சிம்’ அட்டை அல்லது ‘5ஜி’ டாப்-அப் வாங்கியோரும் இவ்வாய்ப்பைப் பெற்றனர். படம்: சிங்டெல்

வெற்றிபெற்ற மற்ற அணிகளுக்குத் தலா $500 ரொக்கமும் வழங்கப்பட்டது.

அதோடு, இப்போட்டிகளில் பங்குபெற்ற மொத்தம் 13 அணிகளுக்கும் $100 உணவகப் பற்றுச்சீட்டும் கிரிக்கெட் விளையாட்டுப் பொருள்களும் வழங்கப்பட்டன.

“வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக அவர்களுக்குப் பிடித்த கிரிக்கெட் போட்டிகளை நடத்தியதோடு ‘5ஜி’ மூலம் அவர்கள் பெறும் பயன்களையும் உணர்த்தினோம்,” என்றார் சிங்டெல் கைத்தொலைபேசிச் சந்தைப்படுத்துதல் பிரிவுத் துணைத் தலைவி ஷில்பா அகர்வால்.

இதன்வழி கிடைத்த சிறந்த வரவேற்பினால் தொடர்ந்து வெளிநாட்டு ஊழியர்களைப் பாராட்ட புதிய முயற்சிகளை ஆராயவுள்ளதாகவும் கூறினார்.

போட்டிகளுக்கு மத்தியில் சிங்டெல் கூடங்களும் இடம்பெற்றன. ‘லவ் அண்ட் கம்ஃபர்ட்’ சமூக நிறுவனமும் கூடத்தை அமைத்துத் துணைபுரிந்தது.

போட்டிகளின் மத்தியில் விளையாட்டுகளும் விளையாடிக் களித்தனர் வெளிநாட்டு ஊழியர்கள். படம்: ரவி சிங்காரம்
போட்டிகளுக்கு மத்தியில் சிங்டெல் கூடங்களும் இடம்பெற்றன. படம்: ரவி சிங்காரம்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!