தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தகுதிச் சுற்று: இங்கிலாந்து பெருமிதம்

1 mins read
8e5c7f7f-8fd2-4221-bafa-b92893b15d1d
‘சி’ பிரிவில் முதலிடம் பிடித்து யூரோ 2024 காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற்ற இங்கிலாந்து. - படம்: ஏஎஃப்பி

லண்டன்: யூரோ 2024 காற்பந்துப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது.

திங்கட்கிழமையன்று நடைபெற்ற ஆட்டத்தில் வடமாசிடோனியாவுடன் 1-1 எனும் கோல் கணக்கில் அது சமநிலை கண்டது.

இருப்பினும், ‘சி’ பிரிவில் அது முதலிடம் பிடித்தது.

இத்தாலியைவிட இங்கிலாந்து கூடுதலாக ஆறு புள்ளிகள் பெற்றுள்ளது.

அதுமட்டுமல்லாது, இங்கிலாந்துக்கு இன்னும் இரண்டு ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.

தகுதிச் சுற்றில் இங்கிலாந்து ஓர் ஆட்டத்தில்கூட தோல்வி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் சிறப்பான முறையில் யூரோ 2024 காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற்றிருப்பது பெருமையாக இருப்பதாக இங்கிலாந்து அணித் தலைவர் ஹேரி கேன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்