2024 நீச்சல் உலகக் கிண்ணப் போட்டியை ஏற்று நடத்தும் சிங்கப்பூர், இரு ஆசிய நகர்கள்

2024 நீச்சல் உலகக் கிண்ணப் போட்டியை ஏற்று நடத்தும் சிங்கப்பூர், இரு ஆசிய நகர்கள்

1 mins read
dcce30cd-86f5-4929-b1b6-6deceee66225
நீச்சல் உலகக் கிண்ணத் தொடரை ஏற்று நடத்தும் நாடாக சிங்கப்பூர் திகழ்கிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர், ஷாங்காய், இஞ்சியோன் ஆகிய நகர்கள் கூட்டாகச் சேர்ந்து அடுத்த ஆண்டு நீச்சல் உலகக் கிண்ணப் போட்டியை நடத்தும் என உலக நீர்விளையாட்டு அமைப்பு திங்கட்கிழமை அறிவித்தது.

சீனாவில் அக்டோபர் 18 முதல் 20 வரை, தென்கொரியாவில் அக்டோபர் 24 முதல் 26 வரை, சிங்கப்பூரில் அக்டோபர் 31 முதல் நவம்பர் 2 வரை நடைபெறும் மூன்று போட்டிகள், அடுத்த ஆண்டு டிசம்பரில் ஹங்கேரியத் தலைநகர் புடாபெஸ்ட்டில் நடைபெறும் உலக நீர்விளையாட்டு நீச்சல் வெற்றியாளர் போட்டிக்கான தகுதிச்சுற்றுப் போட்டியாக அமையும்.

2006ல் உலக நீச்சல் வெற்றியாளர் போட்டியையும் 2011ல் உலக நீர்விளையாட்டு வெற்றியாளர் போட்டியையும் ஷாங்காய் நடத்தியது.

நீச்சல் உலகக் கிண்ணத் தொடரை ஏற்று நடத்தும் நாடாகவும் சிங்கப்பூர் திகழ்கிறது. 2025ல் உலக நீச்சல் வெற்றியாளர் போட்டியை சிங்கப்பூர் ஏற்று நடத்தும். உலக நீர்விளையாட்டுப் போட்டி ஒன்றை இஞ்சியோன் ஏற்று நடத்துவது இதுவே முதல்முறை.

குறிப்புச் சொற்கள்