தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காற்பந்து: சிங்கப்பூர், இந்தியா தோல்வி

1 mins read
8b8e3a1c-5388-4817-8f25-7f0b9f78dd18
படம்: - ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: உலகக் கிண்ண காற்பந்து போட்டிக்கான தகுதி ஆட்டத்தில் இந்தியா, சிங்கப்பூர் தோல்வியைத் தழுவியுள்ளன.

அந்த ஆட்டங்கள் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றன.

சிங்கப்பூர் தேசிய விளையாட்டரங்கில் சிங்கப்பூரும் தாய்லாந்தும் மோதின. இந்த ஆட்டத்தில் சிங்கப்பூர் 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

புவனே‌ஷ்வரில் இடம்பெற்ற ஆட்டத்தில் இந்தியா கத்தாரை எதிர்கொண்டது. கத்தார் இந்தியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

மற்றோர் ஆட்டத்தில் தென்கொரியா சீனாவை 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிகண்டது.

பிலிப்பீன்சுக்கும் இந்தோனீசியாவுக்கும் இடையே நடந்த ஆட்டம் 1-1 என்று சமநிலை அடைந்தது.

குறிப்புச் சொற்கள்