டி20 தொடரில் மோதும் இந்தியா - ஆஸ்திரேலியா

1 mins read
42ef7133-419b-45d9-9a79-09f35a44c1b1
இந்திய அணியை முதல்முறையாக வழிநடத்துகிறார் சூர்யகுமார் யாதவ்.  - படம்: ஏஎஃப்பி

விசாகப்பட்டினம்: உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் கிண்ணத்தை இழந்த இந்திய அணி தற்போது ஐந்து டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது.

முதல் ஆட்டம் வியாழக்கிழமை விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.

இந்திய அணியை முதல்முறையாக வழிநடத்துகிறார் சூர்யகுமார் யாதவ். அணித் தலைவர் ரோகித் சர்மா, விராத் கோஹ்லி, கே எல் ராகுல் போன்ற முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

காயம் காரணமாக ஹார்திக் பாண்டியா அணியில் இடம்பெறவில்லை.

ஆஸ்திரேலிய அணியில் பேட் கம்மின்ஸ், டேவிட் வார்னர் இல்லை. மேத்யூ வேட் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்துகிறார்.

இரண்டாவது ஆட்டம் 26ஆம் தேதி திருவனந்தபுரத்திலும் மூன்றாவது ஆட்டம் 28ஆம் தேதி கெளகாத்தியிலும் நடக்கவுள்ளன.

நான்காவது, ஐந்தாவது ஆட்டங்கள் முறையே டிசம்பர் 1ஆம் தேதி நாக்பூரிலும் டிசம்பர் 3ஆம் தேதி ஹைதராபாத்திலும் நடக்கவிருக்கின்றன.

இந்திய அணி விவரம்: சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் கெய்க்வாட், இ‌‌‌ஷான் கி‌‌‌ஷன், ய‌ஷஸ்வி ஜெய்‌ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதே‌ஷ் சர்மா, வா‌ஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல், சிவம் துபே, ரவி பி‌ஷ்னோய், அர்‌ஷ்தீப் சிங், பிரசித் கிரு‌ஷ்ணா, ஆவே‌ஷ் கான், முகே‌ஷ் குமார்.

குறிப்புச் சொற்கள்